நோக்கு

“சர்வதேச வர்த்தக உறவுகளினூடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல்.”

செயற்பணி

“மொத்த உற்பத்தி, வருமானம், வேலைவாய்ப்பு மட்டம் என்பவை அதிகரிப்பதன் உடாக இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார அபிவிருத்திக்கு துடிப்புடன் பங்களிப்புச் செய்வதன் ஊடாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உயர்தர வாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் இருதலைப்பட்ச, பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் அரசின் வர்த்தகக் கொள்கையை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உறவுகளை விருத்தி செய்து முன்னேற்றுதல்.”

DoC ஆனது வெளிநாட்டுவர்த்தகக் கொள்கையை உருவாக்குவதற்கும் அது தொடர்பான எல்லா ஒருங்கிணைப்புகளுக்கும் இருதலைப்பட்ச பிராந்திய பல தலைப்பட்ச மட்டங்களில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகக் உறவுகளை விருத்தி செய்து ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு விடயங்களை நடைமுறைப்படுத்தவதற்கும் பொறுப்பாக உள்ளது.

கட்டமைப்பு

வர்த்தகத் திணைக்களமானது வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் உள்ளதுடன், அதனது பணிகள் பல தலைப்பட்ச வர்த்தக விவகாரங்கள், இருதலைப்பட்ச வர்த்தக உறவுகள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு என்ற பெயருள்ள நான்கு பிரிவுகளின் கீழ் செயற்படுகின்றது.

2017 ஆம் ஆண்டிற்கான பிரதான நடவடிக்கைகள்

  • அமைச்சரவை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் உலக வர்த்தக நிறுவன அபிலாசைகளில் தொடர்ச்சியாக பங்குபற்றுதல்
  • அபிவிருத்தியடைந்து வரும் நாடு மற்றும் விசேட மற்றும் நலிவடைந்த பொருளாதாரங்கள் (SVE) என்ற வகையில் இலங்கைக்கான விசேட மற்றும் வேறுபட்ட நடைமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள்
  • இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளிகளின் வர்த்தக கொள்கை மீளாய்வுகளை கண்காணித்தல்
  • தேயிலை, கறுவா மற்றும் நீலக்கல் போன்றவற்றிற்கான புவியியல் சார்ந்த குறிகாட்டிகள் (GI) தொடர்பான பேச்சுவார்த்தைகள்
  • இலங்கையின் வர்த்தக பங்காளிகளின் தரிவு மற்றும் தரிவல்லா நடவடிக்கைகள் குறித்து வர்த்தக சமூகத்திற்கு அறிவூட்டுதல்.
  • உலக வர்த்தக நிறுவனம் (WTO), ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP), சர்வதேச வர்த்தக நிலையம் (ITC) மற்றும் ஏனைய நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களிலிருந்து மனித வள விருத்திக்கான தொழில்நுட்ப உதவுகையினைக் கோருதல்.
  • இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய ஏனைய நாடுகளின்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் (FTAs), முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள் (PTAs) மற்றும் விரிவான பொருளாதார பங்குடமை உடன்படிக்கைகள் (CEPAs).
  • வர்த்தக சமூகத்திற்கான விழிப்புணர்வு பிராச்சார நடவடிக்கைகளினை மேற்கொள்ளுதல்
  • இந்தியா மற்றும் பாகிஸ்தான ஆகிய நாடுகளுடன் CEPA தொடர்பான விடயங்களைக் கையாளுதல்
  • முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகள், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளிலிருந்து தெரிய வந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல்
  • சீனா, எகிப்து, மலேசியா, ரஷியா, துருக்கி, குவைற் போன்ற நாடுகளுடன் கூட்டு ஆணைக்குழுக்களினை ஏற்படுத்துதல்,
  • ஐக்கிய அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு சட்டரீதியான  உடன்படிக்கை (TIFA) தொடர்பில் இணைந்து பணியாற்றுதல்
  • ஐரோப்பிய யூனியனின் (EU) ஒத்துழைப்பினைப் பெறுவதற்காக இணைந்து பணியாற்றுதல்
  • உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தைகளின் பல்வகைப்படுத்தலுக்கான சந்தை மதிப்பாய்வுகளினை நடாத்துதல்
  • வர்த்தக சந்தைகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடு செய்தல் / ஒருங்கிணைத்தல்
  • உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் தூதுக்குழுக்களை ஒழுங்கமைத்தல்
  • இலஙகை மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் வர்த்தக விசாரணைகளுக்கு பதிலளித்தல்.

Latest News

அனைத்து செய்திகளையும் பார்க்க