வர்த்தக திணைக்களமானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிகுந்த 25 நாடுகளில் 30 பிரதிநிதிகளினைக் கொண்டுள்ளது. அவர்கள் அத்தகைய முக்கியத்துவம் நிறைந்த சந்தைகளில் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை ஊக்குவித்தல் மற்றும் விருத்தி செய்வதில் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையானது குறிப்பாக இலங்கையின் வர்த்தக சமூகத்திற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள வர்த்தக உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்பட்ட பிரதானதொழிற்பாடுகள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன.

  • இலங்கை உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை இனங்காண்பதற்கான சந்தை மதிப்பாய்வுகள் / நுண்ணய்வுகளை தொகுத்தல்
  • உதவி வழங்கும் நாட்டின் வர்த்தக கொள்கை மாற்றங்கள் விசேடமாக வரி மற்றும் வரியல்லா நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்தலும் அறிக்கையிடலும்.
  • முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் / நிகழ்வுகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடு செய்தல். இப்பணியானது இலங்கையின் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதில் அதிக பயனுறுதி வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.  
  • இலங்கையில் நடைபெறும் கண்காட்சிகள் / நிகழ்வுகளில் வெளிநாட்டு வியாபார தூதுக்குழுக்களை பங்குபற்றுவதற்கு ஏற்பாடு செய்தல்
  • அனுசரணை வழங்கும் நாடுகளில் இலங்கையின் (தனி - நாடு) விசேட ஊக்குவிப்பு பிரச்சாரங்களை அரங்கேற்றுதல்.
  • வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா தூதுக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான எற்பாடுகளையும் வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
  • வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கு இலங்கையிலிருந்தும் இலங்கைக்குமான தனிநபர் வியாபார விஜயங்களை ஏற்பாடு செய்தல்
  • அநுசரணை நாடுகளிலுள்ள வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் வலையமைப்பினை ஏற்படுத்துதல்  மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் சர்வதேச நிறுவனங்களினை பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விசாரணைகளை வழங்குதல், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான விஜயங்கள் / கூட்டங்களை நடாத்துதல், தொழில்நுட்ப உதவுகையினை வழங்குதல், வர்த்தகம் தொடர்பான பிணக்குகளை தீர்த்தல் போன்றன.