மூலச்சான்று பத்திரத்தை விநியோகித்தல்
தொடர்புடைய இணைப்புகள்
வணிகத் திணைக்களம்
- விவரங்கள்
- பிரிவு: Our Services
வர்த்தக திணைக்களமானது இலங்கைக்கு முக்கியத்துவம் மிகுந்த 25 நாடுகளில் 30 பிரதிநிதிகளினைக் கொண்டுள்ளது. அவர்கள் அத்தகைய முக்கியத்துவம் நிறைந்த சந்தைகளில் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை ஊக்குவித்தல் மற்றும் விருத்தி செய்வதில் அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவையானது குறிப்பாக இலங்கையின் வர்த்தக சமூகத்திற்கு கிடைக்கக்கூடியதாகவுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள வர்த்தக உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்பட்ட பிரதானதொழிற்பாடுகள் பின்வருவனவற்றினை உள்ளடக்குகின்றன.
- இலங்கை உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை இனங்காண்பதற்கான சந்தை மதிப்பாய்வுகள் / நுண்ணய்வுகளை தொகுத்தல்
- உதவி வழங்கும் நாட்டின் வர்த்தக கொள்கை மாற்றங்கள் விசேடமாக வரி மற்றும் வரியல்லா நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்தலும் அறிக்கையிடலும்.
- முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் / நிகழ்வுகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடு செய்தல். இப்பணியானது இலங்கையின் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதில் அதிக பயனுறுதி வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
- இலங்கையில் நடைபெறும் கண்காட்சிகள் / நிகழ்வுகளில் வெளிநாட்டு வியாபார தூதுக்குழுக்களை பங்குபற்றுவதற்கு ஏற்பாடு செய்தல்
- அனுசரணை வழங்கும் நாடுகளில் இலங்கையின் (தனி - நாடு) விசேட ஊக்குவிப்பு பிரச்சாரங்களை அரங்கேற்றுதல்.
- வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா தூதுக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான எற்பாடுகளையும் வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
- வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கு இலங்கையிலிருந்தும் இலங்கைக்குமான தனிநபர் வியாபார விஜயங்களை ஏற்பாடு செய்தல்
- அநுசரணை நாடுகளிலுள்ள வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறை ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் வலையமைப்பினை ஏற்படுத்துதல் மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் சர்வதேச நிறுவனங்களினை பிரதிநிதித்துவப்படுத்துதல்.
- இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விசாரணைகளை வழங்குதல், வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான விஜயங்கள் / கூட்டங்களை நடாத்துதல், தொழில்நுட்ப உதவுகையினை வழங்குதல், வர்த்தகம் தொடர்பான பிணக்குகளை தீர்த்தல் போன்றன.
- விவரங்கள்
- பிரிவு: Our Services
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பார்வையின் கீழ் நேரடியாக வரும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இணைப்பு அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள், வர்த்தக மற்றும் வியாபார செயற்பாடுகளில் வேலைக்கமர்த்தப்பட்டு வெளிநாடுகளில் வதிபவர்களுக்கான வதிவிட சிபார்சுகளை வழங்கும் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக DOC செயற்படுகிறது.
வெளிநாட்டவர்களை வேலைக்கமர்த்தும் ஒரு கம்பனி அல்லது நிறுவனம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் அவ் வெளிநாட்டவரின் வருகைக்கு முன்பதாக அவரின் பெயர், தேசிய இனம், இலங்கையில் தங்கும் கால அளவு, அவரது ஒப்படையின் இயல்பு போன்ற விபரங்களை அமைச்சின் சிபார்சுடன் கொடுத்து வேண்டுகோள் செய்ய வேண்டும். DOC வதிவிட வீசா வழங்கும் செயன்முறையில் இலங்கையில் வெளிநாட்டு பணியாளரின் பிரசன்னம் கொடுக்கப்பட்ட காரணங்களின் பிரகாரம் அத்தியாவசியமானது என்பதை உறுதிப்படுத்துவதில் சிரத்தையான கவனத்தை செலுத்துவதுடன், அவ்வாறு செய்வதானது எச் சூழ்நிலையிலும் இலங்கையர்களுக்குரிய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களைக் குறைக்காது என்பதிலும் கவனம் செலுத்தும். அதாவது வதிவிடவீசா விண்ணப்பதாரியின் பிரசன்னமானது தேசிய பொருளாதார நோக்கில் நாட்டிற்கு நன்மையானது எனவும் வேலைவழங்குனர் ஒரு பொருத்தமான உள்ளுர் பிரதியீட்டை இனங்காணுவதில் நியாயமான போதியளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பதிலும் கவனம் செலுத்தும்.
மேற்படி, தேவைப்பாட்டின் பிரகாரம் ஒரு வதிவிட வீசா முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமானது மூன்று வாரத்திற்கு முன்பதாகவே வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்திடம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
- விவரங்கள்
- பிரிவு: Our Services
இலங்கை ஒரு நன்மை பெறுனராக அல்லது ஒரு தரப்பாக இருக்கும் எல்லா GSP திட்டங்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தனிவிருப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் என்பவற்றின் கீழ் மூலசான்றுப் பத்திரங்களை COOs வழங்குவதற்கான பொறுப்பை வர்த்தகத் திணைக்களம் கொண்டுள்ளது. COO சான்றுப்பத்திரத்தை பெற்றுக்கொண்டதுடன், ஒரு உற்பத்தியானது மூல ஒப்பந்த விதிகளை ஒத்திருக்கின்றது. COOவின் ஒரு சான்று வழங்கப்பட்டதுடன் அவ் உற்பத்தியானது அச் சந்தைகளுக்குள் ஒன்றில் தீர்வையற்றதாகவோ அல்லது குறைக்கப்பட்ட தீர்வைகளின் கீழோ அச் சந்தைகளுக்குள் நுழையும்.
சராசரியாக, வர்த்தகத் திணைக்களம், ஒருநாளைக்கு 500 சான்றுப்பத்திரங்களை வழங்குகிறது.
ஏற்றுமதி ஆவணப்படுத்தல் செயன்முறையை துரிதமாகப் பூர்த்தி செய்வதை வசதிப்படுத்தும் நோக்குடன் DOA ஆனது பொதுவாக COOக்களை ஒரு நாளுக்குள்ளேயே வழங்குகின்றது.
இந்தக் கடுமையான பணியைச் செயற்படுத்தும் முகமாக திணைக்களத்தின் உள்ள கட்டுப்பாட்டு முறைமையானது மேலதிக செலவு எதுவும் இல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட COO களின் 75% மேலானவைகள் EU GSP திட்டத்தின் கீழ் வந்ததுடன், பிரதானமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆடை உற்பத்திகள் ஏற்றுமதியாகவும் இருந்தது.
உயர்ந்த உற்சாகமான அதிகாரிகள் குழுவொன்று COO பிரிவில் முழு நேரமாக இதற்காக ஒதுக்கப்பட்டு இருப்பதுடன், முன் நியமனங்கள் எதுவுமில்லாமல் அலுவலக நேரங்களில் எந்த நேரத்திலும் ஆலோசனைகளையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இவ் வருடத்தின் கடந்த 9 மாதங்களின் பொழுது இவ்வாறு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளால் சராசரியாக ஆயிரம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
- விவரங்கள்
- பிரிவு: Our Services
The DoC also functions as the focal point in Sri Lanka for joint commissions on trade and economic co-operation which have been established under trade agreements. These joint commissions provide a mechanism for inter-governmental cooperation in trade relations which is extremely beneficial for the development and expansion of Sri Lanka’s exports to the countries concerned. The DoC is responsible for bilateral trade negotiations under these joint commissions from the stage of their formulation, and with respect to coordination of their work and implementation of their decisions.
The scope of these Joint Commissions is comprehensive ranging from trade, banking, and shipping to co-operation in education, science and employment. Activities undertaken in this context apart from contributing to the promotion of Sri Lanka’s trade are intended to foster mutual understanding and co-operation between participating countries and their respective public and private sector agencies.
The Department of Commerce is responsible for co-ordination and conduct of the following Joint Commissions/Committees, which are held at ministerial level.